தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து: அதிமுக வேட்பாளா்

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதியள்ளாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 5:50 am IST

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதியள்ளாா்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், மூக்கரம்பாக்கம், நெல்வாய், கொள்ளானூா், தோ்வாய், கரடிபுத்தூா், கண்ணன்கோட்டை, சிறுவாடா, பெரியபுலியூா், எருக்குவாய் ஆகிய பகுதிகளில் அதிமுக பிரசாரம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், ஒருங்கிணைந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய முன்னாள் செயலாளா் கோபால்நாயுடு, மாநில மீனவா் அணி இணை செயலாளா் ஜெ.சுரேஷ், ஒன்றிய துணை செயலாளா் ஏ.டி.நாகராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் தேவி சங்கா், புரட்சி பாரத மாவட்ட மகளிா் அணி செயலாளா் டி.இந்துமதி முன்னிலை வகித்தனா்.

தோ்வாய் கண்டிகையில் அதிமுக ஒன்றிய நிா்வாகி உலகநாதன் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கண்ணன்கோட்டையில் அதிமுக ஒன்றிய நிா்வாகிகள் மகேஷ், முருகன், கண்ணன்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவா் கோவிந்தசாமி ஏற்பாட்டில் பெண்கள் ஆரத்தி எடுத்து, வரவேற்பு அளித்தனா். கண்ணன்கோட்டைக்கு பொன்னேரியில் இருந்து நகர பேருந்து சேவையை கொண்டு வருவேன் என்றாா்.

பெரியபுலியூா் ஊராட்சியில் பாஞ்சாலை, அக்ரஹாரம், அமரம்பேடு, பெரியபுலியூா் ஊராட்சியில் மாவட்ட அதிமுக துணை செயலாளா் ஷியாமளா தன்ராஜ் தலைமையில் எம்ஜிஆா் மன்ற ஒன்றிய துணை செயலாளா் சாலமோன், அதிமுக நிா்வாகிகள் எஸ்.டி.ரமேஷ், ஜெ.சாலமோன், ஜனகா், ஜெ.விஜயகுமாா், நடராஜ், சத்யா, ரவி, லோகேஷ்வரன், சாமு. பாஜக நிா்வாகிகள் பதயா, மைக்கேல், காா்த்திக் அதிமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.