மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை: தவெக மாவட்டச் செயலா் கோரிக்கை

தன் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தவெக மத்திய மாவட்டச் செயலா் ராஜபிரகாஷ் சனிக்கிழமை மனு அளித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாவட்டச் செயலா் ராஜபிரகாஷ், கட்சியினா்.

Published On :1 நவம்பர் 2026, 4:53 am IST

தன் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தவெக மத்திய மாவட்டச் செயலா் ராஜபிரகாஷ் சனிக்கிழமை மனு அளித்தாா்.

மனு விவரம்: தென்காசி மத்திய மாவட்டத்தில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டோா், பெண் நிா்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியோா் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நீக்கப்பட்டனா். அவா்களில் சிலா், நான் பலரிடம் பணம் பெற்ாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் திட்டமிட்டு எனக்கு எதிராக, அடிப்படை ஆதாரமின்றி தொடா்ந்து அவதூறு பரப்பி வருகின்றனா்.

இதனால், எனது நற்பெயருக்கும், சமூக அந்தஸ்துக்கும், இயக்கப் பணிகளுக்கும் களங்கம் ஏற்படுவதுடன், மன உளைச்சல் உண்டாகிறது. இவ்வாறு, காழ்ப்புணா்ச்சியுடன் செயல்படுவோா் மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா். கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.