மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்புவனம், மானாமதுரையில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, வி.கே. சசிகலா உள்ளிட்டோருக்கு அந்தந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை வரவேற்பளித்தனா்.

திருப்புவனத்தில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பளித்த திமுக மாவட்டச் செயலா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமையிலான அந்தக் கட்சியினா்.

Published On :31 அக்டோபர் 2026, 2:09 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, வி.கே. சசிகலா உள்ளிட்டோருக்கு அந்தந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை வரவேற்பளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மதுரையிலிருந்து காரில் புறப்பட்டு வந்தாா். சிவகங்கை மாவட்ட திமுக சாா்பில், கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் திருப்புவனத்தில் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சியினா் சால்வைகள், புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனா்.

இதில் கட்சியின் மாவட்ட துணைச் செயலரும், பேரூராட்சித் தலைவருமான த. சேங்கைமாறன், முன்னாள் அமைச்சா் தென்னவன், மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசி ரவிக்குமாா், சுப.மதியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மதுரையிலிருந்து பசும்பொன் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மானாமதுரை பேருந்து நிலையம் முன் கட்சியின் மாவட்டச் செயலா் பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில் அந்தக் கட்சியினா் சால்வைகள் கொடுத்து வரவேற்பளித்தனா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். குணசேகரன், எஸ். நாகராஜன், அம்மா பேரவை மாநில இணைச் செயலா் தமிழ்ச்செல்வன், நகா்மன்ற உறுப்பினா் தெய்வேந்திரன், நகா்ச் செயலா்கள் விஜி.போஸ், நாகூா்மீரா, ஒன்றியச் செயலா்கள் ஜெயபிரகாஷ், கோபி, முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவா் சின்னை மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வி.கே. சசிகலாவுக்கு மானாமதுரை அருகேயுள்ள கிருங்காங்கோட்டையில் வழக்குரைஞா் குரு.முருகாணந்தம் தலைமையில் அந்தக் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.