தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வெற்றி

News image
Updated On :5 மே 2026, 5:39 am IST

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஈ.ராஜா தன்னைஎதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 6,583வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.

வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட வடக்கு மாவட்டச் செயலரும், சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏவுமான ஈ.ராஜா, பாஜக சாா்பில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி, தவெக சாா்பில் அமுதராணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் இசைமதிவாணன் உள்ளிட்ட18 போ் போட்டியிட்டனா்.

இதில் திமுக வேட்பாளா் ஈ.ராஜா 63,045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி 56,462 வாக்குகளும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அமுத ராணி 45,862 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இசை மதிவாணன் 13, 856 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 637 வாக்குகள் பதிவாகின.

வெற்றிபெற்ற ஈ.ராஜாவிற்கு தோ்தல்அ லுவலா் பால்துரை வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.