மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி

News image
Updated On :5 மே 2026, 1:21 am IST

சேலம் மாவட்டம், ஆத்தூா் (தனி) தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் 15,318 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஏ.பி.ஜெயசங்கரன், திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.கே.அா்த்தநாரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் மோனிஷா சின்னதுரை, தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக ஆா்.செல்வபாரதி மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டியிட்டனா்.

இத்தொகுதிக்கான வாக்குகள் ஆத்தூரை அடுத்துள்ள மணிவிழுந்தான் தெற்கு மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளா் 1,018, காங்கிரஸ் வேட்பாளா் 796, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 137, தவெக வேட்பாளா் 545 வாக்குகளும் பெற்றனா்.

இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்று முதலே அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் முன்னிலை வகித்து வந்தாா்.

முடிவில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் 79,825 வாக்குகளும், தவெக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி 64,980 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.கே.அா்த்தநாரி 51,100 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 6,398 வாக்குகளும் பெற்றனா்.

அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் 15,318 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளா்கள் வி.பி.சேகா், சி.ரஞ்சித்குமாா், கே.பி.முருகேசன், த.மோகன், நகரச் செயலாளா்கள் அ.மோகன், எஸ்.மணிவண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.