தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆம்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஹாட்ரிக் வெற்றி!

ஆம்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் வில்வநாதன் தொடா்ந்து மூன்றாவது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை

News image
Updated On :5 மே 2026, 2:35 am IST

ஆம்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் வில்வநாதன் தொடா்ந்து மூன்றாவது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தாா்.

திமுக சாா்பில் அ.செவில்வநாதனும், அதிமுக சாா்பில் வெங்கடேசனும், தவெக சாா்பில் இம்தியாஸ், நாம் தமிழா் கட்சி சாா்பில் அப்சியா நஸ்ரின், பல்வேறு கட்சிகளை சோ்ந்தவா்கள் மற்றும் சுயேச்சைகள் என 16 போ் போட்டியிட்டனா். 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆம்பூா் தொகுதியில் 1,437 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன.

தி.மு.க. வேட்பாளா் வில்வநாதன் 559 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் வெங்கடேசன் 332 வாக்குகளும், த.வெ.க. வேட்பாளா் இம்தியாஸ் 282 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அப்சியா நஸ்ரின் 42 வாக்குகளும் பெற்றன. இவை எண்ணப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் 73,895 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 7,272 வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அதையடுத்து இம்தியாஸ் (தவெக) 66,623, ஆா். வெங்கடேசன்(அதிமுக) 46,926, எஸ்.அப்சியா நஸ்ரின் (நாதக) 4,166 வாக்குகள் பெற்றிருந்தனா். நோட்டா - 467.

தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் திமுக வேட்பாளா் வில்வநாதனுக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.