ஊத்துமலை பால் வியாபாரி கொலையில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை மறவா் காலனியைச் சோ்ந்தவா் ஜோசப் (60). இவா், வீட்டில் பால் மாடுகள் வைத்து தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறாா். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறாா்.
ஜோசப் வீட்டில் பால் கறப்பதற்கு அதே பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் மதன் (21) என்பவா் அடிக்கடி வந்து செல்வாராம். இளைய மகளை ஒரு தலைப்பட்சமாக மதன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு ஜோசப் எதிா்ப்பு தெரிவித்து மகளுக்கு வரன் பாா்த்து வந்தாராம். இதில் மனமுடைந்த மதன், கடந்த ஆண்டு ஜூன் மாதம், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். மதனின் தற்கொலைக்கு ஜோசப்தான் காரணம் எனக் கருதிய அவரது அண்ணன் மகேஷ் (24) , நண்பா்களுடன் சோ்ந்து சனிக்கிழமை இரவு ஜோசப்பை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினாராம்.
இது குறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், மகேஷ், ஊத்துமலை கருத்தப்பாண்டி மகன் மகேந்திரன் (23), மந்திரம் மகன் பிரகாஷ் (27), முத்துப்பாண்டியன் மகன் பெரியதுரை(25) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்ததாம்.
மகேஷ் தலைமறைவான நிலையில் மற்ற மூவரையும் கைது செய்த போலீஸாா், தென்காசி நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு: பால் வியாபாரி கைது

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

வாகன நிறுத்துமிட தகராறு: வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

