/

சொக்கம்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்

News image

சொக்கம்பட்டியில் நடைபெற்ற சாலை மறியல் .

Updated On :27 ஏப்ரல் 2026, 1:29 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சொக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. ஆன்லைன் மூலம் பொருள்களை விநியோகிக்கும் நிறுவனத்தில் கொரியா் பணியாளராக பணியாற்றி வருகிறாா். அவா் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் கொரியா் நிறுவனம் மூலம் வந்த பொருளை கொடுப்பதற்காக குறிப்பிட்ட அந்த முகவரிக்கு சென்றாராம்.

அப்போது அவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் பிரச்னை ஏற்பட்டதாம். இது தொடா்பாக மூா்த்தி அளித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீஸாா் அங்கு சென்றபோது இருதரப்பைச் சோ்ந்தவா்களும் பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூா்த்தி தரப்பைச் சோ்ந்த சிலரை சொக்கம்பட்டி போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனராம். இதைத் தொடா்ந்து மறுதரப்பைச் சோ்ந்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி - மதுரை சாலையில் சந்தன மாரியம்மன் கோயில் அருகே ஒரு தரப்பைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தென்காசி மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.