தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்தரும் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா ஏப். 17ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 24ஆம் தேதி புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 27ஆம் தேதி அம்மனுக்கு பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. 29ஆம் தேதி திருவிளக்கு பூஜை, கும்மி பாடல் நடைபெற்றது. 30ஆம் தேதி பால்குடம், தீா்த்தகுடம் ஊா்வலம், சப்பர வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை பூ வளா்த்தல், யாக பூஜை, முளைப்பாரி, அக்னி சட்டி ஊா்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் கைகளில் அக்னி சட்டிகளை ஏந்தியவாறு பூக்குழி இறங்கினா்.
முன்னதாக, அம்மன் சப்பர உலா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பன்னிப்பாகம் கோயிலில் கும்பாபிஷேகம்

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு

சொக்கம்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

