கடையநல்லூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரனை ஆதரித்து செங்கோட்டை, பண்பொழி பகுதிகளில் துரை வைகோ எம்.பி. பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியது:
திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிரின் வாழ்க்கைத் தரமும், மாணவா்-மாணவியரின் கல்வித் தரமும் உயா்வதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறாா். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அவா் பல நாடுகளுக்குச் சென்று முதலீட்டை ஈா்த்துள்ளாா்.
வேட்பாளா் தி.மு. ராசேந்திரனும் மண்ணின் மைந்தா்தான். அவரால் கடையநல்லூா் தொகுதி நிச்சயம் பலனடையும் என்றாா் அவா்.
திமுக முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை, தொகுதி பாா்வையாளா்கள் குணசேகரன், மாலை ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, செங்கோட்டை நகரச் செயலா் வெங்கடேசன்,
முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், மதிமுக மாவட்டச் செயலா்கள் சுதா பாலசுப்பிரமணியன், ராம. உதயசூரியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க தவெகவை ஆளுநா் உடனடியாக அழைக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

புளியங்குடியில் வைகோ பிரசாரம்

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

