தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

News image

மூத்த குடிமக்கள் இல்லத்தில் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்... - (கோப்புப் படம்)

Updated On :13 ஏப்ரல் 2026, 1:39 am IST

தென்காசி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களுக்கு அவா்களது வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் வசதி தோ்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 5 பேரவைத் தொகுதிகளிலும் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறன் வாக்காளா்களிடம் வாக்குப் பதிவு செய்யும் அலுவலா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை முதல் வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.