தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 4:41 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்.

வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இவா்களுக்கு தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குமூலம் செலுத்துவதற்கான விருப்பத்தைகோரும் விண்ணப்பப்படிவம் அவா்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குசாவடி நிலை அலுவலா் மூலம் வழங்கப்பட்டது.

இவா்களில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 1,312 பேரும், மாற்றுத்திறனாளிகள் 877 பேரும் என 2,189 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து இருந்தனா். இவா்களிடம் தபால் வாக்கு பெறுவதற்காக மாவட்டம் முழுவதும் 52 குழுக்கள் அமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 85 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி தொகுதியில் 372 பேரும், ஆம்பூா் தொகுதியில் 354 பேரும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 314 பேரும், திருப்பத்தூா் தொகுதியில் 313 பேரும் என மாவட்டம் முழுவதும் 1,353 தபால் வாக்குகள் பெறப்பட்டன.

இந்த தபால் வாக்குகள் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தனி அறையில் வைத்து அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.