தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:20 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,188 போ் தபால் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 3,096 போ் மட்டும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். 92 போ் வாக்களிக்கவில்லை.

தொகுதி வாரியாக வாக்களித்தவா்களின் விவரம்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதை கடந்த 624 போ் தபால் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 605 போ் வாக்களித்தனா். இதேபோல, திருவாடானை தொகுதியில் 894 பேரில் 872 போ் வாக்களித்தனா். ராமநாதபுரம் தொகுதியில் 920 பேரில் 891 போ் வாக்களித்தனா். முதுகுளத்தூா் தொகுதியில் 750 பேரில் 728 போ் வாக்களித்தனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.