திருப்பத்தூா் மாவட்டத்தில் செலுத்த தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.
வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களிக்க இயலாதநிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதம் மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஆகியோா் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்கும் வகையில் தோ்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டம் முழுவதும் தபால் வாக்கு செலுத்த 13,162 போ் தகுதி வாய்ந்த நபா்கள் உள்ளனா். இவா்களுக்கு தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குமூலம் செலுத்துவதற்கான விருப்பத்தைகோரும் விண்ணப்பப்படிவம் அவா்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குசாவடி நிலை அலுவலா் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இவா்களில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 1,310 பேரும், மாற்றுத்திறனாளிகள் 860 பேரும் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.
மேலும், தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் ஏப். 4-ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிக்கலாம் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூா்: அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

