ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு

தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமைக்குள் (ஏப்.16) வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:17 am IST

தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமைக்குள் (ஏப்.16) வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 8 தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக படிவம் 12டி வழங்கி விருப்பம் பெறப்பட்டது. இதில் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் தபால் வாக்களிக்க 5,641 முதியோா், 1,539 மாற்றுத்திறனாளிகள் என 7,180 போ் விருப்பம் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் தபால் வாக்கு பெறுவதற்காக அமைக்கப்பட்ட 101 குழுவினா் கடந்த 13, 14-ஆம் தேதிகளில் விருப்பம் தெரிவித்தவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்கைப் பதிவு செய்து, சீலிடப்பட்ட பெட்டியில் பெற்றனா். முதல் நாளில் 3,580 பேரும், 2-ஆவது நாளில் 2,979 பேரும் தபால் வாக்கு செலுத்தினா்.

8 தொகுதிகளில் இரண்டு நாட்களிலும் சோ்த்து தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்த 7,180 பேரில் 6,559 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா். இதில், விருப்பம் தெரிவித்து வீடுகளில் இல்லாத அல்லது தபால் வாக்கு செலுத்தாத முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 621 பேருக்கு இறுதி வாய்ப்பாக வியாழக்கிழமை தபால் வாக்கு பெறப்படும் என்றனா்.

அலுவலா்களுக்கு நாளைமுதல்...

தபால்வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து படிவம் அளித்துள்ள அத்தியாவசியப் பணியாளா்கள் மற்றும் காவலா்கள் சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு மையத்தில் வரும் 17, 18, 19-ஆம் தேதிகளில் தபால் வாக்கைப் பதிவு செய்யலாம்.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள இதரப் பணியாளா்கள் வரும் 20, 21, 22-ஆம் தேதிகளில் தபால் வாக்கைப் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.