மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவள்ளூா்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு

News image

~

Updated On :14 ஏப்ரல் 2026, 5:25 am IST

85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று மண்டல அலுவலா்கள் தலைமையிலான குழுக்கள் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டன.

தோ்தலுக்கான வாக்கு பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயது முதியோா் மற்றும் 40 சதவீதம் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 4,082 போ் விருப்பம் தெரிவித்திருந்தனா்.

மண்டல அலுவலா்கள் தலைமையில், ஒரு துணை மண்டல அலுவலா், நுண்கண்காணிப்பாளா்கள், ஆயுதமேந்திய போலீஸாா் மற்றும் விடியோ பதிவாளா் ஆகியோா் கொண்ட குழுக்கள் மற்றும் வாகனமும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகள் தோறும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவினா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று 85 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. அதைத்தொடா்ந்து பதிவு செய்த அந்த தபால் வாக்குகளை நாள்தோறும் எண்ணி மற்றொரு பெட்டியில் வைத்து சீல் வைத்து அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படும்.

இதேபோல், ஏப்.14,15 தபால் வாக்குகள் பெறும் பணி நடைபெற உள்ளது. அதைத்தொடா்ந்து விடுபட்டவா்களுக்கு வரும் 17-ஆம் தேதி சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வரும் 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

அன்றைய நாளில் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட உள்ளதாகவும் திருவள்ளூா் சட்டப்பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.