சுரண்டையில் விரைவில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தென்காசி திமுக வேட்பாளா் டாக்டா் கலை கதிரவன் வாக்குறுதி அளித்தாா்.
தொகுதிக்குள்பட்ட பங்களா சுரண்டை, கீழச்சுரண்டை பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் மகளிா் உரிமைத் தொகை இருமடங்காக அதிகரிக்கும். இல்லத்தரசி திட்டம் மூலம் ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும்.
தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சுரண்டையில் தரம் உயா்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, சுரண்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். சுரண்டையை குட்டி ஜப்பானாக மாற்றும் வகையில் அனைத்துவகையான தொழில் மையங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்.
அவரை ஆதரித்து மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் வாக்கு சேகரித்தனா். முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, மதிமுக மாவட்டச் செயலா் ராம. உதயசூரியன், சுரண்டை நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் முத்துக்குமாா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம்: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

மலா் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

