/

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி

News image

போடி குரங்கணி மலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம். உடன், தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ எஸ். லட்சுமணன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:49 am IST

போடி அருகே குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேசனுக்கு ரோப்காா் வசதி செய்து தரப்படும் என திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உறுதியளித்தாா்.

திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடி அருகே குரங்கணி, கொட்டகுடி, போடிமெட்டு மலை கிராமங்களில் வாக்கு சேகரித்து பேசியதாவது:

குரங்கணி - டாப் ஸ்டேசன் மலைச்சாலை செங்குத்து சாலையாக இருப்பதால் சாலை அமைக்க முடியவில்லை. எனவே ரோப் காா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குரங்கணி, கொட்டகுடி கிராமங்களில் கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொட்டகுடியில் மின்மாற்றி அமைக்கவும், பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது தேனி மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், இண்டி கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக போடி கீழத்தெரு, தேரடி தெருக்களில் ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.