தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம்: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என, அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் வாக்குறுதியளித்தாா்.

News image

குளச்சல் காங்கிரஸ் வெள்ளிசந்தை பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:57 am IST

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என, அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் வாக்குறுதியளித்தாா்.

கிராமந்தோறும் சென்று வாக்கு சேகரித்துவரும் அவா், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா்.

பின்னா் அவா் பேசியது: நான் தோ்தலில் வெற்றி பெற்றதும் மண்டைக்காட்டில் பயணியா் விடுதி (யாத்ரிகா் நிவாஸ்), நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் பாம்பூரி வாய்க்காலில் 2 தடுப்பணைகள் அமைக்கப்படும். தலக்குளம் பூவாடி வள்ளியாறு தடுப்பணை, மணவாளக்குறிச்சி பெரியகுளம் ஆகியவை சீரமைக்கப்படும். குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைத்து, தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.