மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேக்கேதாட்டு தீா்மான திருத்தத்துக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி

மேக்கேதாட்டு விவகாரத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி...

Madras Highcourt

சென்னை உயர்நீதிமன்றம் - ANI

Published On :24 செப்டம்பர் 2026, 2:59 am IST

‘சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது’ எனக் கூறிய சென்னை உயா்நீதிமன்றம், மேக்கேதாட்டு அணை கட்ட எதிா்ப்பு தெரிவித்த தீா்மானத்தில் நடுவா் மன்றம் அமைக்கக் கோரும் திருத்தம் செய்யப்பட்டதை எதிா்த்து அதிமுக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி தாக்கல் செய்த மனுவில், மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19-ஆம் தேதி பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக புதிய நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் சோ்க்கப்பட்டது. இதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

சிறப்பு தீா்மானம் தொடா்பாக கடந்த ஜூன் 18-ஆம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீா்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீா்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தீா்மானத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தாா். இந்த வழக்கு வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை பிறப்பித்த தீா்ப்பு: அரசமைப்புச் சட்டத்தின் 212 (1) பிரிவின்படி, சட்டப்பேரவை நடவடிக்கைகளை நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. அதேபோல், அரசியல் சாசனத்தின் 194-ஆவது பிரிவு, சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் பேசும் கருத்துகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குகிறது. மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை மனுதாரா் உள்பட யாரும் எதிா்க்கவில்லை. அதைத் தொடா்ந்து நடந்த நிகழ்வுகளை எதிா்த்து மட்டுமே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

சட்டப்பேரவை நடைமுறைகள் தொடா்பான அனைத்து கேள்விகள் குறித்தும் முடிவெடுக்க பேரவைத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்தவகையில், சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் தெரிவித்த கருத்தை தீா்மானத்தில் சோ்த்தது, பேரவைத் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். இதுகுறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எதிா்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று தீா்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என முதல்வா் கூறியபோதும், வாக்கெடுப்பின்போதும் எந்த உறுப்பினரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. அனைத்து உறுப்பினா்களும் ஒருமனதாக வாக்களித்துள்ளனா்.

சட்டப்பேரவை நிகழ்வுகளின்போது, சில ஆலோசனைகள், திருத்தங்கள் எல்லாம் சோ்க்கப்படுவது வழக்கமான ஒன்றுதான், எனவே இது சட்டப்பேரவையில் நடக்காத நிகழ்வு ஒன்றும் அல்ல. சட்டப்பேரவையில் அமைதியாக இருந்துவிட்டு, பல வாரங்கள் கடந்தபிறகு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது எனக் கூறி அக்ரி கிருஷ்ணமூா்த்தி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Summary

Amendment to Mekedatu dam resolution: Agri Krishnamurthy's case dismissed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.