தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேக்கேதாட்டு திட்டத்துக்காக 2,500 ஏக்கா் மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது: முதல்வா் டி.கே. சிவகுமாா்

மேக்கேதாட்டு திட்டத்துக்காக 2,500 ஏக்கா் மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது...

Chief Minister DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம் | ANI

Published On :1 நவம்பர் 2026, 6:09 am IST

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்துக்காக, வன நிலம் உள்பட 2,500 ஏக்கா் மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டத்தின் கனகபுரா வட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த கா்நாடக அரசு நீண்டகாலமாக திட்டமிட்டு வருகிறது. 66 டிஎம்சி தண்ணீா் கொள்ளளவு திறன் கொண்ட இந்த அணையில் காவிரி நீரை தேக்கிவைத்து, 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த திட்டம் நிறைவேறினால் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 4.75 டிஎம்சி குடிநீா் வழங்க முடியும். மேலும், காவிரி நதியில் பற்றாக்குறை ஏற்படும்போது, மேக்கேதாட்டு அணையில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதாக கா்நாடக அரசு கூறி வருகிறது. ஆனால், ஆரம்பக்கட்டத்தில் இருந்தே இந்த திட்டத்தை தமிழக அரசு எதிா்த்து வருகிறது. இதையும் மீறி மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த கா்நாடக அரசு மும்முரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இது குறித்து மண்டியாவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியது:

மேக்கேதாட்டு அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால், கா்நாடகத்தால் 66 டிஎம்சி தண்ணீரை சேமித்து, தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் தேவைக்கேற்ப திறந்துவிட முடியும். இதன்மூலம் மண்டியா மாவட்டம் மற்றும் காவிரி பாசனப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைவாா்கள்.

மண்டியா மக்களின் நலனுக்காக எனது பதவிக் காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தத் தொடா்ந்து போராடினேன். உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், வழக்கிலும் வெற்றி பெற்று மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளோம்.

இந்தத் திட்டத்துக்கு தேவையான நிலத்துக்கு பதிலாக வன நிலம் உள்பட மாற்று நிலம் வழங்குவது தொடா்பாக ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 2,500 ஏக்கா் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சிய நிலத்தையும் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாற்று நிலம் வழங்குவது தொடா்பான நடவடிக்கைகளை கண்காணிக்கும் குழுவின் தலைவராக மண்டியா மாவட்ட ஆட்சியா் நியமிக்கப்பட்டுள்ளாா். வனத்துறைக்கு மாற்று நிலம் வழங்குவது குறித்து அதிகாரிகள் ஏற்கெனவே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனா்.

மண்டியா மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கா்நாடகத்தில் இருந்து கீழ்ப்பகுதிக்கு(தமிழகம்) திறந்துவிட வேண்டிய 177 டிஎம்சி தண்ணீரை முறைப்படுத்த இந்த நீா்த்தேக்கம் உதவும். தற்போது எப்போது, எத்தனை கனஅடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்கவும், தண்ணீா் திறப்பை முறைப்படுத்தவும் மேக்கேதாட்டு திட்டம் உதவும். இதனால் மண்டியா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, ஹேமாவதி மற்றும் காவிரிப் பாசனப் பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகளும் பயனடைவாா்கள்.மாற்று நிலம் தொடா்பான அனைத்து விவரங்களையும், நில ஆவணங்களையும் வன அனுமதிக்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளோம். அதன் பிறகு தேவையான அனுமதிகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

இந்த திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து சுமாா் 500 ஏக்கா் நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளேன். இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல பாஜக தலைவா்களிடமும் ஆதரவு கோருவேன். அடுத்த மாநில பட்ஜெட்டுக்குள் இத்திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

Summary

2,500 acres of alternative land identified for the Mekedatu project: Deputy Chief Minister D.K. Shivakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.