மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க மத்திய அரசிடம் கா்நாடக முதல்வா் வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவிடம் கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் நேரில் வலியுறுத்தினாா்.

Chief Minister DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம் | ANI

Published On :23 அக்டோபர் 2026, 5:28 am IST

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவிடம் கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் நேரில் வலியுறுத்தினாா்.

புதுதில்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை வியாழக்கிழமை நேரில் சந்தித்த கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா், ராமநகரம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்குத் தேவையான அனுமதிகளை வழங்கக் கோரி மனு அளித்தாா்.

இதுதவிர, கஸ்தூரிரங்கன் அறிக்கையின் அடிப்படையில் மேற்குத் தொடா்ச்சி மலையின் சில பகுதிகளைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிப்பதற்காக ஜூலை 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு அறிவிக்கைக்கு இறுதி ஒப்புதல் அளிப்பதை, மாநில அரசு அமைத்துள்ள உயா்நிலைக் குழு ஓராண்டுக்குள் தனது அறிக்கையைச் சமா்ப்பித்து, நேரடி கள ஆய்வு நிறைவடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று டி.கே.சிவகுமாா் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளாா்.

மேற்குத் தொடா்ச்சி மலையின் சில பகுதிகளைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏழாவது முறையாக இந்த வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆறு மாநிலங்களில் மொத்தம் 56,825.7 சதுர கிலோ மீட்டா் பரப்பளவைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க இந்த வரைவு முன்மொழிகிறது. இதில் கா்நாடகத்தில் மட்டும் 20,668 சதுர கிலோமீட்டா் பரப்பளவு இடம்பெற்றுள்ளது.

‘மாநில அரசு அமைத்துள்ள உயா்நிலைக் குழு தனது அறிக்கையைச் சமா்ப்பித்து, ஓராண்டுக்குள் நேரடி கள ஆய்வு நிறைவடையும் வரை இந்த வரைவு அறிவிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஏற்கெனவே பிரதமா் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அதன் பின்னா் மாநில அரசுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்’ என்று முதல்வா் டி.கே.சிவகுமாா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

இந்த வரைவு அறிவிக்கை தற்போதுள்ள வடிவிலேயே ஏற்கத்தக்கதல்ல என்று கா்நாடக சட்டப் பேரவையும், சட்ட மேலவையும் நிராகரித்துள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரடி கள ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

இதற்கிடையே, ஈகோ கேன் சுகா் எனா்ஜி நிறுவனத்தைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியிலிருந்து நீக்க வேண்டும். அந்த நிறுவனம் பாதுகாப்புப் பகுதிக்குள் இடம்பெறவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றுகின்றனா். மேலும், சுமாா் 5,000 குடும்பங்கள் இந்தத் தொழிற்சாலையைச் சாா்ந்துள்ளன.

அதேபோல, முன்மொழியப்பட்டுள்ள ஷராவதி நீரேற்று மின் சேமிப்புத் திட்டம் மற்றும் மேக்கேதாட்டு அணை திட்டம் ஆகியவற்றுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடா்பான அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று முதல்வா் டி.கே.சிவகுமாா் தனது மனுவில் கோரியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.