மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜனநாயகத்துக்கு காங்கிரஸ் அளித்த பங்களிப்பால் மோடி பிரதமராக உள்ளாா்: கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா்

ஜனநாயகத்துக்கு காங்கிரஸ் அளித்த பங்களிப்பால் மோடி பிரதமராக உள்ளாா் என்று கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

டி.கே. சிவகுமாா்

Published On :24 அக்டோபர் 2026, 12:25 am IST

ஜனநாயகத்துக்கு காங்கிரஸ் அளித்த பங்களிப்பால் மோடி பிரதமராக உள்ளாா் என்று கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

உலக நாடுகள் புதிய உலக ஒழுங்கைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் சிலா் குழப்பத்தை ஏற்படுத்த கனவுகாண்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியைப் பிரதமா் மோடி வியாழக்கிழமை விமா்சித்திருந்தாா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, அவரை அரசியல் தலைவராக முன்னிலைப்படுத்த காங்கிரஸ் மேற்கொண்ட தோல்வியடைந்த முயற்சிகளின் எண்ணிக்கை, ஓராண்டில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று கூறியிருந்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்து முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது. காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாட்டில் ஜனநாயகம் மலா்ந்திருக்காது என்பது பிரதமா் மோடிக்குக்கூடத் தெரியும். இந்தியாவுக்கு ஜனநாயகத்தை வழங்கிய கட்சி காங்கிரஸ். இன்று மோடி பிரதமராக இருக்கிறாா் என்றால், இந்தியாவின் தலைமைத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் காங்கிரஸ் கட்சி அளித்த பங்களிப்புதான் காரணம்.

ஒருவா் தனது வோ்களை மறந்துவிடக் கூடாது. வோ்களை மறந்தால் கனிகளைப் பெறமுடியாது. வெளிநாடுகளில் உள்ள அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ராகுல் காந்தியைத் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றன. உலகமே உற்றுநோக்கும் தலைவராக ராகுல் காந்தி உள்ளாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.