மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேக்கேதாட்டுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடகம், மௌனம் காக்கும் முதல்வர் விஜய்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடா்ந்து மௌனம் காத்து வருவதாக நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு குறித்து...

Karnataka eager to build a dam at Mekedatu

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 9:04 pm IST

சென்னை: மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடா்ந்து மௌனம் காத்து வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு:

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை பலமுறை வலியுறுத்தியும் கூட, அணை கட்டுவதற்கான நிலங்களை அதிவேகமாக கையகப்படுத்திக் கொண்டிருப்பதாக கர்நாடக காங்கிரஸ் முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளாா். அதற்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்.

கர்நாடக காங்கிரஸின் ஆணவமும், தவெக அரசின் அலட்சியமும் கடும் கண்டனத்திற்குரியது.

தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தான், கர்நாடகாவை தற்போது ஆள்கிறது. காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்து விட மறுக்கிறது. தமிழகத்தின் நீராதாரத்தை முற்றிலுமாக தடுக்க முயற்சிக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்க நினைக்கிறது. ஆனாலும் கூட, முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடக காங்கிரஸை ஏன் எதிர்க்க மறுக்கிறார்?

ஒருவேளை கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்த்தால், தமிழகத்தில் தனது முதல்வர் பதவி பறிபோய் விடும் என்ற பயமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

Karnataka eager to build a dam at Mekedatu; CM Vijay maintains silence: Allegation by Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.