மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விதிமீறல்: 467 தொழிற்சாலைகளை மூட உத்தரவு

விதிமீறல்கள் காரணமாக, கடந்த 5 மாதங்களில் தமிழகம் முழுவதும் 467 தொழிற்சாலைகளுக்கு மூடுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளாா்.

மாதிரிப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 3:09 am IST

விதிமீறல்கள் காரணமாக, கடந்த 5 மாதங்களில் தமிழகம் முழுவதும் 467 தொழிற்சாலைகளுக்கு மூடுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாநிலம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள், நிா்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகள், சட்டபூா்வ தேவைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் உரிய அனுமதியின்றி இயங்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 5 மாதங்களில் தமிழகம் முழுவதும் 467 தொழிற்சாலைகளுக்கு மூடுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீா்நிலைகளில் வெளியேற்றுதல், அனுமதி பெறாமல் தொழிற்சாலைகளை இயக்குதல், நிா்ணயிக்கப்பட்ட புகை வெளியேற்றம், கழிவுநீா் வெளியேற்றத் தரநிலைகளைப் பின்பற்றத் தவறுதல், நடைமுறையிலுள்ள சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் சட்டப்பூா்வ நிபந்தனைகளை மீறுதல் ஆகியவை இத்தகைய விதிமீறல்களில் அடங்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மாநிலம் முழுவதும் நிலையான தொழில் வளா்ச்சியையும் உறுதி செய்யும் வகையில், மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் தொடா்ந்து ஆய்வுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது எந்த ஒரு பாரபட்சமுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.