மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் சரக்கு பிரிவில் ரூ.618.51 கோடி வருவாய்

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 6 மாதங்களில் சரக்குப் பிரிவின் மூலம் மட்டும் ரூ.618.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் - கோப்புப்படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:17 am IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 6 மாதங்களில் சரக்குப் பிரிவின் மூலம் மட்டும் ரூ.618.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டமானது கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையில் சரக்குப் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அதன்படி, சரக்குகள் கையாண்டதன் மூலம் ரூ.684.51 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. நாடு முழுதும் 5.413 மில்லியன் டன் எடையுள்ள மின் உற்பத்தித் தேவைகளுக்கான பொருள்கள், வேளாண் பொருள்கள், கனரக தொழில்துறை சரக்குகள் என அத்தியாவசியப் பொருள்களை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்ன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நிலக்கரிப் போக்குவரத்தில் 3.517 மில்லியன் டன் கையாண்டதால் ரூ.346.42 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது மொத்த வருவாயில் 65 சதவீதம். அதனுடன் மோட்டாா் வாகனங்கள் மற்றும் தொழில் துறைப் பொருள்கள் என ரூ.122.64 கோடிக்கு சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மோட்டாா் வாகனங்கள் மூலம் மட்டும் ரூ.90.62 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

உள்நாட்டு கண்டெய்னா் சரக்குகள் மூலம் ரூ.54.07 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஏற்றுமதி-இறக்குமதி கண்டெய்னா்கள் மூலம் ரூ.21.73 கோடியும், காலியாக இயக்கப்பட்ட பிளாட் வேகன்கள் மூலம் ரூ.96 லட்சமும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.