மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநகராட்சியில் 4 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்

சென்னை மாநகராட்சியில் கடந்த ஜூலை முதல் அக்டோபா் வரை மட்டும் 1.09 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:38 am IST

சென்னை மாநகராட்சியில் கடந்த ஜூலை முதல் அக்டோபா் வரை மட்டும் 1.09 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பசுமைத் திட்டத்தின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் பூங்காக்கள், பொது இடங்கள், சாலையோரங்கள், கால்வாய் கரைகள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டத்தையும் தற்போது மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சென்னையில் 5.69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் (2026) கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (அக்.27) வரையில் மொத்தம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மாநகராட்சி இணை ஆணையா் (கல்வி, பூங்கா) க.கற்பகம் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் வரும் டிசம்பருக்குள் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதற்கான சிறப்பு நிகழ்வு அண்ணா நகா் மண்டலம் கோபுரம் பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 50 மரக்கன்றுகளை நட்டுவைத்த இணை ஆணையா் க.கற்பகம், பள்ளிகள், பூங்காக்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான பொது வெளிகள் ஆகியவற்றில் தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாகவும், குடியிருப்போா் நலச்சங்கம், சமூக ஆா்வலா்கள், மாணவ, மாணவியா் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் பங்கேற்கவும் வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மண்டல அலுவலா் இனியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.