தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை: ஒரே மாதத்தில் ரூ.300 கோடி வரி வசூல்

சென்னை மாநகராட்சியில் அக்டோபா் மாதத்தில் மட்டும் ரூ.300 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:38 am IST

சென்னை மாநகராட்சியில் அக்டோபா் மாதத்தில் மட்டும் ரூ.300 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் சொத்து வரியாக ரூ.2,000 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரியானது இரு அரையாண்டுகளாகப் பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. அதனடிப்படையில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையில் ஒரு அரையாண்டாகவும், அக்டோபா் முதல் மாா்ச் வரையில் மற்றொரு அரையாண்டாகவும் கணக்கிட்டு மாநகராட்சியின் வருவாய்ப்பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள் வசூலிக்கின்றனா்.

அதன்படி 2026-27-ஆம் நிதியாண்டுக்கான கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையில் முதல் அரையாண்டில் ரூ.1,103 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபா் முதல் அடுத்த அரையாண்டுக்கான சொத்துவரி வசூல் தீவிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அக்டோபா் மாதம ரூ.445 கோடி வரிவசூலுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி, அக்.25-ஆம் தேதி வரை ரூ.300 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். அக்.31-க்குள் மேலும் ரூ.140 கோடி வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் அக்டோபரில் மட்டும் ரூ.277 கோடியாக சொத்து வரி வசூல் இருந்த நிலையில், நடப்பாண்டில் அதைவிடக் கூடுதலாகவே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது உரிய நேரத்தில் சொத்து வரியைச் செலுத்துவோருக்கு 5 சதவீத வரி தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.