மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திரைத்துறையின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் ராஜ்மோகன்

திரைத்துறையின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருப்பது பற்றி...

The government will continue to support the growth of the film industry: Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன்.

Published On :30 அக்டோபர் 2026, 8:39 pm IST

திரைத்துறையின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்டு தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள 224 தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைப்பட மானியத் தொகைக்கான காசோலைகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வழங்கினார்.

அப்போது நிகழ்வில் பேசிய அவர், தமிழ் சினிமா மக்களின் வாழ்க்கை, பண்பாடு, உணர்வுகள் மற்றும் சமூகப் பிரச்னைகளைப் பிரதிபலிப்பதோடு, சமூகத்தில் விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. பெண் சிசு கொலை போன்ற சமூகப் பிரச்னைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கருத்தம்மா போன்ற திரைப்படங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், தரமான திரைப்படங்களை உருவாக்குவதற்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. வணிக நோக்கத்தைத் தாண்டி, சமூக அக்கறையுடனும் நல்ல கருத்துகளுடனும் சிறந்த படைப்புகளை உருவாக்கி வரும் தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான மானியங்களை மீண்டும் வழங்கப்படுவதன் மூலம் அவர்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் மீட்டெடுக்கப்படுகின்றது.

இனிவருங்காலங்களில், எவ்விதத் தடையுமின்றி திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான விருதுகளும், மானியங்களும் வழங்கப்படும். திரைத்துறையின் வளர்ச்சிக்கும், அதனைச் சார்ந்தவர்களின் நலனுக்கும் அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

திரைத்துறையினர் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இனிவருங்காலங்களில் தமிழ் சினிமாவிற்கான விருதுகள், கலைமாமணி விருதுகள், மாநில விருதுகள் மற்றும் மானியங்கள் தகுதியினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படும். இதுவே முதல்வரின் உறுதியான வழிகாட்டுதலாகும் என்று தெரிவித்தார்.

Summary

Minister Rajmohan stated that the government will continue to support the growth of the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.