மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குளறுபடிகளைச் சரிசெய்து ரூ. 2,500 வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி

ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி அளித்த விளக்கம் பற்றி...

Irregularities to be Rectified and rs 2,500 Will Be Provided: Minister Jagadishwari

அமைச்சர் ஜெகதீஸ்வரி

Published On :30 அக்டோபர் 2026, 5:29 pm IST

ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கமளித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர் கல்லணை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்துவது குறித்து விளக்கமளித்தார்.

பொதுவாக ஒரு கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக வந்து மரியாதை செலுத்துவது வழக்கம் என்றாலும், இந்த முறை காலையில் இருந்து வெவ்வேறு குழுக்களாக வந்து மரியாதை செலுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், கட்சி நிர்வாகிகளுக்கு வெவ்வேறு பணிகள் இருப்பதால் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்துவதாகவும், இதனை கட்சிக்குள் அணிகளாகப் பிரிந்திருப்பதாகக் கருதக் கூடாது என்றும் தெரிவித்தார்.

தங்களுக்குள் எந்தவிதமான வேற்றுமையும் இல்லை என்றும், ஒற்றுமையாகச் செயல்படுவதே தங்களது நோக்கம் என்றும் கூறினார்.

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் எப்போது வழங்கப்படும் எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் அவற்றைச் சரிசெய்து, கடைக்கோடி மக்களுக்கும் அதன் பயன் சென்றடையும் வகையில் முதல்வரின் உத்தரவின்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் முதல்வர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

Summary

Minister Jagadishwari has provided a clarification regarding the rs 2,500 Women's Rights Assistance Scheme.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.