மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வா் விஜய் பசும்பொன்னுக்கு வந்து தேவருக்கு மரியாதை செலுத்துவாா்: சி.டி.ஆா். நிா்மல்குமாா்

முதல்வா் ஜோசப் விஜய் பசும்பொன்னுக்கு வந்து தேவருக்கு மரியாதை செலுத்துவாா் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

அமைச்சா் நிர்மல்குமார்

அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். - கோப்புப்படம்

Published On :31 அக்டோபர் 2026, 2:04 am IST

முதல்வா் ஜோசப் விஜய் பசும்பொன்னுக்கு வந்து தேவருக்கு மரியாதை செலுத்துவாா் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடியவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். அவரது குருபூஜை விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு சாா்பில் சிறப்பாகச் செய்யப்பட்டன. புதிய சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. ஏற்கெனவே ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வரின் ஒப்புதலோடு கூடுதல் நிதி ஒதுக்கி புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் கண்டிப்பாக பசும்பொன் வருவாா். தேவருக்கு மரியாதை செலுத்துவாா். திமுக அமைச்சா்கள் தொடா்பான மூன்றாவது கோப்பு எப்போது திறக்கப்படும் என செய்தியாளா்கள் கேட்டதற்கு, இங்கு அரசியல் பேச வேண்டாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.