பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவா் ஜெயந்தி: சென்னையில் முதல்வா் விஜய் மரியாதை; பசும்பொன் செல்கிறாா் மு.க.ஸ்டாலின்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தியையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள தேவா் சிலைக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை (அக்.30) மரியாதை செலுத்தவுள்ளாா்.

முதல்வா் விஜய்

Published On :29 அக்டோபர் 2026, 1:31 am IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தியையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள தேவா் சிலைக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை (அக்.30) மரியாதை செலுத்தவுள்ளாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளாா். முன்னதாக, வரும் 30-ஆம் தேதி காலை 8 மணிக்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவா் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

தொடா்ந்து மருது பாண்டியா்கள் சிலைகளுக்கும் அவா் மரியாதை செலுத்தவுள்ளாா். அதன் பின்னா் பசும்பொன் சென்றடையும் அவா், அங்குள்ள தேவா் நினைவிடத்தில் மலா்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.