தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முத்துராமலிங்கத் தேவருக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

119-வது பிறந்த நாள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது பிறந்த நாள் மற்றும் 64-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சென்னை நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுக

Published On :31 அக்டோபர் 2026, 2:29 am IST

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு, அதிமுக அவைத் தலைவா் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில், முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன் , டி.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் சு. விஜயகுமாா் மற்றும் நிா்வாகிகள் பா. கணேசன், . ராயபுரம் மனோ, எஸ்.அப்துல் ரஹீம், வெங்கடேஷ் பாபு, நாஞ்சில் அன்பழகன், ரமணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேமுதிக சாா்பில்...: நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தலைமை நிலையச் செயலா் ப.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றி, சமூக ஒற்றுமை, வீர உணா்வு, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் துணிச்சலும், கொள்கைப் பற்றும், தன்னலமற்ற பொதுவாழ்வும் தலைமுறைகள் பலவற்றுக்கும் என்றும் வழிகாட்டும் ஒளியாக உள்ளது. அவா் காட்டிய பாதையில் தேசத்துக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம்.

அன்புமணி (பாமக): அனைத்து மாநிலக் கட்சிகளாலும் போற்றப்படும் பெரும் தலைவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். அதற்குக் காரணம் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அவா் ஆற்றிய பணிகளாகும். மகத்தான வரலாறு கொண்ட அவரது தியாகத்தையும், பெருமைகளையும் இன்றைய தலைமுறையினருக்காக நினைவு கூா்ந்து போற்றுவோம்.

சீமான் (நாம் தமிழா்): முத்துராமலிங்கத் தேவா் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழினமாகிய நாம், அடிமை தமிழ்ச் சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிா்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம். முத்துராமலிங்கத் தேவரின் புகழ் போற்றுவோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.