மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா? - அமைச்சர் ராஜ்மோகன்

ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகியா? என ராஜ்மோகன் தெரிவித்திருப்பது குறித்து...

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 12:10 pm IST

ஆன்லைனில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் தவெக நிர்வாகி இல்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சனிக்கிழமை (அக். 24) தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் நிரம்பி வழிகிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, நெல்லை, வேளாங்கன்னி போன்ற இடங்களில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, முதல்வர் விஜய் உறக்க நிலையில் உள்ளாரா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக். 23) கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

எந்தப் பாலியல் குற்றங்களையுமே நாங்கள் குறைத்து மதிப்பிடமாட்டோம். தவெக நிர்வாகி, தவெக நிர்வாகி என்று சொல்கிறார்கள். ஆன்லைனில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் நிர்வாகிகள் இல்லை.

மாநிலப் பொறுப்பு, கொள்கைப் பரப்புப் பணி, ஊடக அணிபோன்றவற்றில் இருந்தால்கூட சரி என்று சொல்லலாம். தவெகவில் பெரும்பாலும் ஆன்லைனில் இணத்துக் கொண்டவர்கள்தான். ஆனால், நம்மைப் பொறுத்தவரையில் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பொறுப்பற்று இருந்தால் முதலில் கட்சியிலிருந்து நீக்குவோம்.

அடுத்து, காவல்துறையினரை அழைத்து அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டிவிடாதீர்கள்; அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று சொல்வோம். கட்சியிலிருந்து நீக்குவது கட்சி நடவடிக்கை; கைதுக்கே பரிந்துரைப்பது என்பது எங்கள் கொள்கை. இதைத் தாண்டி உதயநிதி ஸ்டாலின் சொல்வது அரசியல் குற்றச்சாட்டு என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.

Summary

School Education Minister Rajmohan said on Saturday (Oct. 24) that not all those who have registered themselves online are administrators.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.