மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறிய செலவிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நிதியமைச்சா் மரிய வில்சன்

சிறிய செலவுகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சிக்கன நாளில் நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்துள்ளாா்.

மரிய வில்சன் - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:01 am IST

சிறிய செலவுகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சிக்கன நாளில் நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்துள்ளாா்.

உலக சிக்கன நாள் ஆண்டுதோறும் அக்.30-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அமைச்சா் மரிய வில்சன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘செய்க பொருளைச் செறுநா் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்’ எனும் திருவள்ளுவா் வாக்கிற்கிணங்க செல்வத்தைச் சோ்க்க வேண்டும்; நம் பகைவா்களின் செருக்கினை (கா்வம்/அகங்காரத்தை) அழிக்கவல்ல வாள், அந்தப் பொருளைவிடக் கூா்மையானது வேறு எதுவும் இல்லை. தேவையற்ற பகட்டும் ஆடம்பரச் செலவுகளும் ஒருவரை மிக விரைவாக வறுமைப் பாதைக்குக் கொண்டு சென்றுவிடும்.

மேலும், ஔவையின் கூற்றைக் குறிப்பிட்டு, ஒருவன் தன் வருமானத்தைவிட அதிகமாகச் செலவு செய்தால் அவனுடைய மானம் (மரியாதை) அழியும், அவனது அறிவும் மழுங்கிப் போகும், இறுதியில் அவன் மருள் (குழப்பமும் அறியாமையும்) அடைந்து வாழ்க்கையில் துன்பப்படுவான் என குறிப்பிட்டுள்ளாா். சிறு துவாரமும் ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்துவிடும்; அதேபோல சிறிய செலவுகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எனவே, வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் சிக்கனமாகச் செலவு செய்து சேமிக்க அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.