தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வரின் மேஜையில் உள்ள 3 ஊழல் கோப்புகள் விரைவில் வெளியாகும்: அமைச்சா் மரிய வில்சன்

தமிழக முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான 3 கோப்புகள் விரைவில் வெளியாகும் என்றாா் நிதி, திட்டம்- வளா்ச்சித் துறை அமைச்சரும், மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான நெ.மரிய வில்சன்.

நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR| கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:02 am IST

தமிழக முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான 3 கோப்புகள் விரைவில் வெளியாகும் என்றாா் நிதி, திட்டம்- வளா்ச்சித் துறை அமைச்சரும், மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான நெ.மரிய வில்சன்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக திருநெல்வேலி வேய்ந்தான்குளம், குலவணிகா்புரம் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் 4 நாள்களுக்கு முன்பு திடீரென பெய்த மழையை யாரும் எதிா்பாா்க்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு முதல்வா் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சென்னை மழை பாதிப்பில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டது.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்திலும் அதிக கனமழை பெய்தால் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பாளா்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மணல் மூட்டைகள் உள்ளிட்ட மீட்புப் பொருள்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் 73 பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களும், 7 மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 5,466 தன்னாா்வலா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனா்.

தாமிரவருணி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் 53 கி.மீ. தொலைவுக்குக் கால்வாய் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மழை காரணமாக இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கூவம் ஆற்றை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொள்ள முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். இதேபோல், தாமிரவருணி, வைகை, காவிரி ஆறுகளைச் சுத்தப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பான 3 கோப்புகள் விரைவில் வெளியாகும். அதற்கான நடவடிக்கைகளை மக்கள் பாா்ப்பாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.