மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லையில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: மரிய வில்சன்

நெல்லையில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் மரிய வில்சன் விளக்கம்

Marie Wilson

அமைச்சர் மரிய வில்சன் - எக்ஸ்

Published On :22 அக்டோபர் 2026, 4:50 pm IST

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 5 மண்டலங்களாகப் பிரித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதியமைச்சரும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் தலைமையில் நடைபெற்றது .

இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பருவமழையை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் அமைச்சர்.

முன்னதாக 17.67 கோடி ரூபாய் மதிப்பில் 18 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 1816 பயனாளிகளுக்கு 7.43 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டத்திலும் பருவமழையை எதிர்கொள்ள அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டு பெய்த அதிகபட்ச மழையை அளவுகோலாகக் கொண்டு, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. எந்தவொரு சூழலிலும் பொதுமக்களுக்கு அசம்பாவிதமோ, உயிரிழப்போ ஏற்படக்கூடாது என்பதே அரசின் முதல் இலக்கு.

நெல்லை மாவட்டம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மழையால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய 71 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நெல்லையில் 2, பாளையங்கோட்டையில் 5 என 7 இடங்கள் மிகவும் ஆபத்தான பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு, அங்கு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் இடங்களில் உடனடியாக உதவ 5,466 தன்னார்வலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், மணல் மூட்டைகள், படகுகள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயாராக உள்ளன. மின்தடை ஏற்பட்டாலும் தொலைத்தொடர்பு டவர்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் டீசல் ஜெனரேட்டர்களைப் பராமரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மழைக்கால உதவிகளுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், வணக்கம் நெல்லை செயலியையும் தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், திருநெல்வேலிக் கால்வாய் மற்றும் நயினார்குளம் உபரிநீர் செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 70% நிறைவடைந்துள்ளன. மழைக்காலம் தொடங்கிவிட்டதால், தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடி தற்காலிகமாகப் பாதையைச் சமன்படுத்தவும், சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றை சீரமைக்க 1031 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார்செய்யப்பட்டு நீர்வளத்துறையில் இருந்து தமிழக நிதித்துறை செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இதுகுறித்து எனக்கு தகவல் இல்லை, இதுகுறித்து கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.