தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தியது குறித்து...

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தவெக சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜா, மதன் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - டிஎன்எஸ்

Published On :30 அக்டோபர் 2026, 10:07 am IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜா, மதன் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுடன் பேசுகையில், தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தபோது மின்தடை ஏற்பட்டதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், கோயிலில் ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சுவிட்ச் மாற்றம் செய்யப்பட்டபோது சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே மின்தடை ஏற்பட்டது மற்றபடி மின்தடை எதுவும் ஏற்படவில்லை என்று விளக்கமளித்தார்.

தொடர்ந்து தமிழகத்தின் மின்சாரத் தேவை குறித்துப் பேசிய அவர், மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.8 முதல் ரூ.35 வரை கொள்முதல் செய்வதற்கான விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பிற மாநிலங்களில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41 வரை கொள்முதல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கபாண்டியன், கோபிஷன், கருப்பையா, ஜெகநாத் மிஸ்ரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேவர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Ministers garland the statue of Muthuramalinga Thevar to pay their respects

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.