மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆற்று நுரைக்கு ஷாம்பு காரணம் எனக் கூறுவது கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா? - பாஜக கேள்வி

நொய்யலில் நுரை பொங்க ஷாம்புதான் காரணம் எனக் கூறியது கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

Nainar Nagendran

நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 9:35 pm IST

நொய்யல் ஆற்றில் நுரை பொங்க ஷாம்புதான் காரணம் எனக் கூறியது கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நொய்யலில் நுரை பொங்க ஷாம்புதான் காரணம் எனக் கூறியது அறியாமையிலா? அல்லது, கமிஷன் தந்த ஆலைகளை காப்பாற்றவா?

மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு ஆகியவை ஆற்றில் கலப்பதனால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது என்னும் "விஞ்ஞான" ரீதியான விளக்கத்தை தவெக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்‌ ராஜீவ் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நீர்நிலைகளில் சட்டவிரோதமாக திறந்துவிடப்படுவதே நுரை பொங்க முக்கியக் காரணம் எனும் அடிப்படைக் கூற்றை மறைத்து, சோப்பு ஷாம்பு தான் காரணம் என மக்களை நோக்கி குறைகூறும் தவெக அமைச்சரின் இந்தக் கருத்தை அறியாமை என எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.

தமிழகத்தின் நீராதாரங்களை கண்காணிக்க இயலாத தவெக அரசின் திறனின்மையை மறைப்பதற்காவோ அல்லது சம்பந்தப்பட்ட ஆலைகளை காப்பாற்றி கமிஷன் பெறுவதற்காகவோ கூறப்பட்ட கருத்தோ இது எனும் சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

பதவியேற்றப் புதிதில் தனது துறையை மாற்றிக் குறிப்பிட்டதைப் போல, இன்னும் தான் வகிக்கும் துறையை சுற்றுலாத் துறை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்றும் புரியவில்லை. இனியாவது, தொட்டதற்கெல்லாம் மக்களை நோக்கி குறை சொல்வதை விடுத்து, அமைச்சர் ராஜீவ் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, முதலில் போர்க்கால அடிப்படையில் நொய்யல் ஆற்றினை தூய்மைப்படுத்த வேண்டும்!

கமிஷன் தூண்டிலில் சிக்காமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நீராதாரத்தை காக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்! என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

BJP leader Nainar Nagendran has questioned whether the claim that shampoo is the reason for the foam in the Noyyal River was made to protect the factories identified by the commission.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.