மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

252 விவசாயிகள் கைது! தவெகவின் பாசிச போக்கு: நயினார் நாகேந்திரன்

விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறித்து...

இருங்களூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா்.

Published On :23 அக்டோபர் 2026, 9:56 am IST

திருச்சி அருகே பயிர்க்கடன் தள்ளுபடிகோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரனின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "போராடும் விவசாயிகளை ஒடுக்கிவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்து விடுமா முதல்வர் விஜய் அவர்களே?

திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே, தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி, அமைதியான வழியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற 252 விவசாயிகளை உங்கள் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டீர்கள். ஆனால், அந்த அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை மட்டும் தடாலடியாக கைது செய்வீர்களா? என்ன விதமான பாசிசப் போக்கு இது? உங்கள் நிர்வாகத் திறனின்மையை மறைக்க, போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது தான் மாற்று அரசியலா? பதில் கூறுங்கள் முதல்வரே?

அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டுமென மேடைகளில் வசனம் பேசிக் கொண்டு, 'உண்டி கொடுக்கும்' விவசாயப் பெருமக்களை மனசாட்சிக்குத் தெரிந்தே இப்படி வஞ்சிக்கும் உங்களை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

BJP Chief Nainar Nagenthran condemns TVK government for arresting farmers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.