மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆறுகளில் நுரைக்கு சோப்பு, ஷாம்புதான் காரணம்! விஞ்ஞானமே வியக்கும் அமைச்சரின் பதில்! டிடிவி தினகரன்

ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்புதான் காரணம் என்று விஞ்ஞானமே வியக்கும் அமைச்சரின் பதில் என்று டிடிவி தினகரன் விமர்சனம்.

rajeev

அமைச்சர் ராஜீவ் - TN assembly

Published On :28 அக்டோபர் 2026, 1:32 pm IST

ஆறுகளில் நுரை பொங்குவதற்கு மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புகள்தான் காரணம் என விஞ்ஞானமே வியக்கும் அமைச்சரின் வினோத விளக்கம், கோமாளிகளின் கூடாரமான தமிழ்நாடு அமைச்சரவை என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் வே.க.ராஜீவ், ஆறுகளில் நுரை பொங்குவதற்கு ஷாம்பு, சோப்பு போன்றவைதான் காரணம் என்று கூறியிருந்தது பேசுபொருளாகியிருக்கிறது.

இது குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கருத்தில், ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் "சோப்பு, ஷாம்புகள்தான் காரணம்" விஞ்ஞானமே வியக்கும் அமைச்சரின் வினோத விளக்கம் - கோமாளிகளின் கூடாரமான தமிழ்நாடு அமைச்சரவை !

திருப்பூர் மாவட்டம், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர், ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விஞ்ஞானமே வியக்கும் வினோதமான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

அரசியல் விபத்தால் முதலமைச்சரான ஜோசப் விஜய் அமைச்சரவையில், தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே தெரியாமல் சில காலம் குழம்பிய அமைச்சர், தற்போது தனது துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதா? அல்லது ஆறுகளில் மாசு ஏற்பட்டு நுரை பொங்குவதற்கும் எதிர்க்கட்சிகளின் சதிதான் காரணம் எனக் கூறாமல் விட்டு விட்டாரே என்று மகிழ்ச்சியடைவதா? என்று தெரியவில்லை.

மேலும் ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அமைச்சர், பிரச்சினையின் தீவிரத்தை உணராமல் இத்தகைய விளக்கங்களை அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்த அரசு எந்த அளவிற்கு அக்கறையுடன் செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

காற்று வீசாததால் காற்றாலைகள் சுழலவில்லை; அதனால்தான் மின்தட்டுப்பாடு ஏற்பட்டது எனக் கூறிய எரிசக்தித் துறை அமைச்சர், டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முழுக்கைச் சட்டை அணிய வேண்டும் என சொல்லிய சுகாதாரத் துறை அமைச்சர், தற்போது ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விளக்கம் அளித்திருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என, ஒட்டுமொத்த அமைச்சரவையும் நிர்வாகத் திறனற்றவர்களாலும் கோமாளிகளாலும் நிறைந்திருப்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தெரிந்திருக்கிறாரா அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கிறாரா?

எனவே, ஒவ்வொரு பிரச்சனைக்கும் அபத்தமான விளக்கங்களை அளிப்பதில் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து, ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சட்டவிரோதமாகக் கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுத்து, ஆறுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையையும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.