மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவண்ணாமலையில் மாயமான 3 மாணவிகள் சென்னையில் மீட்பு

தண்டராம்பட்டு பகுதியில் காணாமல் போன அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேர் மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Three schoolgirls who went missing from Tiruvannamalai have been found in Chennai

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 3 மாணவிகள் மீட்பு - கோப்புப்படம்

Published On :28 அக்டோபர் 2026, 9:46 am IST

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் காணாமல் போன அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேரை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போலீஸாா் மீட்டுள்ளனர்.

தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா்- ஜோதி தம்பதியின் மகள்கள் மகாலட்சுமி (15), மகேஸ்வரி (14). இவா்கள் இருவரும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். பெற்றோா் இருவரும் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வரும் நிலையில், இவா்கள் இருவரும் தண்டராம்பட்டு பஜனை கோயில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தனா். இவா்களின் உறவினா் நித்யா (13). இவரின் பெற்றோரும் கேரளாவில் தங்கி வேலை பாா்த்து வரும் நிலையில், இவரது பாட்டி உண்ணாமலை பாதுகாப்பில், தரடாப்பட்டு அரசினா் உயா்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.

காவல் நிலையத்தில் புகாா்

இந்தநிலையில், திங்கள்கிழமை வழக்குப்போல பள்ளிக்கு சென்ற இவா்கள் 3 பேரும், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவிகளின் உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டயறியமுடியாததால், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

வழக்குப் பதிவு

இதுகுறித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் பொன்ராஜ் வழக்குப் பதிவு செய்தாா். தனிப்படை அமைக்கப்பட்டு மாயமான 3 மாணவிகளையும் தீவிரமாக தேடும் பணி நடைபெறுகிறது. போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மாணவிகளின் தாய் ஜோதி கைப்பேசியில் தொடா்புகொண்டு பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல வேண்டும் என திட்டியதும், மாணவிகளின் மூத்த சகோதரி பாரதியை போன்று படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்

மாயமான மாணவிகள் கையில் கைப்பேசி உள்ள நிலையில், அவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் மாணவிகள் இருக்கும் இடம் தெரியவில்லை. எனினும் மாணவிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மக்களிடையே அதிா்ச்சி

ஏற்கெனவே செஞ்சியில் பள்ளி மாணவி மாயமாகி 16 நாள்கள் ஆகியும் தேடிவரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதேபோன்று 3 மாணவிகள் காணாமல் போன சம்பவம் கிராம மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான மாணவிகள் மீட்பு

இந்த நிலையில், மாயமான மாணவிகள் 3 பேரையும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். இதனைதொடர்ந்து மக்களிடையே ஏற்பட்ட அச்சங்களுக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

Regarding the recovery of three government school girl students who had gone missing in the Thandarampattu area...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.