மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

10 நாள்களாக காவல் துறையினர் தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Missing girl case near Gingee Transfer to CBCID

மாயமான சிறுமியின் குடும்பம்

Published On :22 அக்டோபர் 2026, 12:43 am IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல்போன வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி, கடந்த 12-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல்போனாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தீவிரமாக தேடி வருகின்றனா். காணாமல்போன சிறுமியை மீட்பதற்காக 3 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். மேலும் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் 600 கைப்பேசி உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தினா்.

எனினும், வழக்கில் துப்பு துலங்கவில்லை. 10 நாள்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகளிடம், விழுப்புரம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குக்குரிய ஆவணங்களை ஒப்படைக்கின்றனா். இதையடுத்து சிபிசிஐடி, சிறுமி காணாமல்போனது குறித்து புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை தொடங்கும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Summary

Missing girl case near Gingee Transfer to CBCID

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.