மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செஞ்சியில் 7 வயது சிறுமி மாயம்- கூடுதல் அதிகாரி நியமனம்!

செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் கூடுதல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி...

7-Year-Old Girl Missing in Gingee– Additional Officer Appointed

தமிழ்நாடு காவல் துறை - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:56 pm IST

செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் கூடுதல் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12ஆம் தேதி சிறுமி மாயமான நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தனபால், பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7). இவா், அங்குள்ள அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 11-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளை குடுபத்தினருடன் கொண்டாடிவிட்டு, வீட்டில் பெற்றோருடன் தூங்கிய ஹேமலதா, மறுநாள் அதிகாலை மாயமாகியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். பின்னா், செஞ்சி டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்ததுடன், வீட்டை சுற்றியுள்ள கிணறுகள், மலைப்பகுதிகள், புதா்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிறுமியைத் தேடி வந்தனா். மேலும், சந்தேகத்துக்குரிய 600 கைப்பேசி உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தினா்.

ஆனால், சிறுமி மாயமாகி 10 நாள்களுக்கு மேலாகியும் எவ்வித முன்னேற்றமோ, தடங்களோ கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை தங்களது விசாரணையைத் தொடங்கினா் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Kanchipuram CB-CID DSP Velmurugan has been appointed as the additional investigating officer in the case of the 7-year-old girl missing from Gingee.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.