தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!

தேனி சிறைச் சம்பவத்தைத் தொடர்ந்து 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள் பற்றிய செய்தி..

TN prisons to get armed guards after 17 inmates escape from Theni jail

சிறைச்சாலை சம்பவம்

Published On :28 அக்டோபர் 2026, 6:44 pm IST

தேனி சிறைச்சாலையிலிருந்து ஒரே நாளில் 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 1995ஆம் ஆண்டு சுரங்கம் தோண்டி வேலுர் சிறையிலிருந்து 43 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைப் பற்றி பலரும் பேசி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறைச்சாலையிலிருந்து திங்கள்கிழமை நள்ளிரவில் தப்பிச் சென்ற 17 கைதிகளும் பிடிபட்டு விட்டனர். 15 பேர் இன்று காலை வரை பிடிபட்டிருந்த நிலையில், தேடப்பட்டு வந்த மேலும் இருவர் அவர்களாகவே வந்து சரணடைந்துள்ளனர்.

தேனி சிறைச்சாலை சம்பவம் பரவலாகப் பேசப்படும்போது வரலாற்றில் 1995ஆம் ஆண்டு வேலூர் சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பற்றிய வரலாற்றுப் பக்கங்கள் புரட்டப்படுகின்றன.

அதாவது, 1995ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 43 பேர், வேலூர் மத்திய சிறையில் இருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற 43 பேருமே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களில் கிட்டத்தட்ட 20 பேர் அவர்களது சொந்த நாட்டுக்கே தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மிகவும் பாதுகாப்பு நிறைந்த, தற்போது வேலூர் கோட்டை என்று அறியப்படும் பகுதியில்தான் வேலூர் மத்திய சிறைச்சாலை இயங்கி வந்தது. இப்போதும் உள்ளது. திப்பு ஹால் பகுதியில் சிறைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் சிறைச்சாலையின் ஒரு கழிப்பறையிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் சுரங்கம் போல தோண்டி, அங்கிருந்து 153 அடி நீளத்துக்கு வேலூர் கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழிக்கு அருகே சுரங்கம் தோண்டிச் சென்று தப்பியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, கிட்டத்தட்ட 50 அடி ஆழமுள்ள அகழியில் குதித்து, அங்கிருந்து கைதிகள் அனைவரும் நீந்திச் சென்று தப்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தப்பிச் சென்ற 43 பேரில் 20 பேர் இலங்கைக்குத் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

31 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் அப்போது தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் விசாணைக் குழு அமைக்கப்பட்டது.

அது மட்டுமில்லை, அந்த 1995-ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 52 பேர் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியிருக்கிறார்கள்.

முதல் சம்பவம் 1995ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மத்திய சிறைச்சாலையில் நிகழ்ந்தது. 9 கைதிகள், இவர்களும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறையில் வழங்கப்படும் போர்வையை பயன்படுத்தி கயிறு போல மாற்றி சிறையிலிருந்து தப்பியிருக்கிறார்கள்.

இவர்களில் ஏழு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர், மற்ற இருவரும் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 1992-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 பேர் தப்பிச் சென்றதும் வரலாறில் பதிவாகியிருக்கிறது.

Summary

A report on the 43 prisoners who escaped by digging a tunnel following an incident at the Theni prison in 1995.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.