தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளதைப் பற்றி...

தமிழ்நாடு சட்டப்பேரவை

Published On :28 அக்டோபர் 2026, 9:02 am IST

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து தலா ரூ. 3.54 கோடி வீதம் 2026-27 நிதியாண்டுக்​காக ரூ.828.36 கோடி நிதி ஒப்​புதல் அளித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை வெளி​யிட்​டது.

கடந்த ஆண்​டு​களில் ஒவ்​வொரு தொகு​திக்​கும் சட்​டப்​பேரவை தொகுதி மேம்​பாட்டு நிதி​யாக ரூ. 3 கோடி வீதம் மொத்​தம் ரூ.702 கோடி நிதி​ ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட நிலையில், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களால் செயல்​படுத்​தப்​படும் திட்​டப்​பணிகளுக்​கான 18 சதவீத ஜிஎஸ்டி செல​வை​யும் மாநில அரசே ஏற்​றுக்​கொண்​டு, அதற்​கான நிதி​யை​யும் கூடு​தலாக ஒதுக்​கீடு செய்தது.

இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தங்களை மேற்கொண்டு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி நிதியை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக, அரசுப் பள்ளிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கு மட்டுமே உபகரணங்கள் வாங்க எம்.எல்.ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் தரப்பில் அரசாணையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில்படி, தற்போது, இந்த பட்டியலில் அரசுப் பள்ளிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கு அடுத்ததாக அங்கன்வாடி மையங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிறப்பித்துள்ளது.

Summary

The Government of Tamil Nadu has issued a government order introducing new amendments to the Member of the Legislative Assembly (MLA) Constituency Development Fund.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.