தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை.

Firecracker prices rise

பட்டாசு - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 1:47 am IST

தீபாவளிக்கு மறுநாள் (நவ. 9) அரசு உள்ளூா் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அரசாணை:

நிகழாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தீபாவளிக்கு அடுத்த நாள் நவ. 9 (திங்கள்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. பலதரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்று, அரசு கவனமுடன் பரிசீலித்து இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

சாதாரண அரசு அலுவலகங்களுக்கு நவ. 9 விடுமுறை என்பதால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிா்க்க, அவா்களுக்கு அந்த விடுமுறைக்கு ஈடாக நவ. 28-இல் விடுமுறை வழங்கப்படும்.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள கருவூலங்கள், சாா்நிலை கருவூலங்கள் உள்ளிட்ட பணியாளா்களோடு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளியையொட்டி, நவ. 7 முதல் 9 வரை மூன்று நாள்கள் தொடா் விடுமுறை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.