தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

10, 20, 50 ரூபாய்த் தாள்களைக் குறைக்கிறதா ஆர்பிஐ? தீபாவளி குறித்து தீயாய் பரவும் தகவல்!

ரூ.10, ரூ.20 ரூ.50 தாள்கள் புழக்கத்தைக் குறைக்கிறதா ஆர்பிஐ என்ற தகவல் பற்றி..

ரிசர்வ் வங்கி | RBI

ரிசர்வ் வங்கி | RBI

Published On :3 நவம்பர் 2026, 4:53 pm IST

பணப்புழக்கத்தை ஆர்பிஐ குறைக்கவிருப்பதாகவும், அதனால் தீபாவளிக்கு முன்னதாக ரூ.10, ரூ. 20 மற்றும் ரூ.50 தாள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று வாட்ஸ்ஆப்பில் பரவி வரும் தகவல் மக்களிடையே ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறாதவர்கள், எவ்வாறு தீபாவளிக்கு பொருள்கள் வாங்குவது என்ற அச்சத்தில் உள்ளனர்.

அதாவது, ஆர்பிஐ வெளியிட்டதாக ஒரு சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், ரூ.10, ரூ.20, ரூ.50 தாள்களை தீபாவளிக்கு முன்னதாக, புழக்கத்திலிருந்து மெல்ல குறைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

தீபாவளி நெருங்கும் நேரத்தில், வியாபாரிகள் மற்றும் மக்களை இந்த தகவல் வெகுவாகப் பாதித்துள்ளது. அது மட்டுமல்லாமல், நவ. 8ஆம் தேதி ஏற்கனவே பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட நாள் என்பதால், இந்த தகவலும் அந்த நாளை குறிவைத்திருப்பதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

ஆனால், இது தொடர்பாக பரவும் தகவல் உண்மையில்லை, போலி செய்தி என்று பிஐபி உண்மை அறியும் சோதனைக் குழு உறுதி செய்திருப்பதோடு, பணப்புழக்கத்தை குறைப்பது குறித்து ஆர்பிஐ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறியிருக்கிறது.

எனவே, வாட்ஸ்ஆப் என்றில்லை, சமூக வலைத்தளங்களில் எந்த தகவல் பரவினாலும், மக்கள் அது உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ளாமல் யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆர்பிஐ அறிக்கையில் அதன் லோகோ, ஆர்பிஐ ஆளுநரின் கையொப்பம் என அனைத்தும் இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே ஆர்பிஐ டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கு மக்களை ஊக்குவித்து வருவதாலும், ரூ.10, ரூ.20, ரூ.50 தாள்களை குறைக்கிறது என்ற தகவலை மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.

Summary

Is the RBI phasing out Rs 10, Rs 20, and Rs 50 notes? Rumors spread like wildfire ahead of Diwali!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.