பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அங்கன்வாடி மையங்களுக்கும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி: தமிழக அரசு அரசாணை

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை அங்கன்வாடி மையங்களுக்கும் பயன்படுத்தலாம் என தமிழ்நாடு அரசு புதிய திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

TN Govt Issues Order Allowing MLA Funds for Anganwadi Centres

தமிழ்நாடு அரசு.

Published On :29 அக்டோபர் 2026, 12:52 am IST

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை அங்கன்வாடி மையங்களுக்கும் பயன்படுத்தலாம் என தமிழ்நாடு அரசு புதிய திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஜிஎஸ்டியுடன் சோ்த்து தலா ரூ. 3.54 கோடி வீதம் 2026-27 நிதியாண்டுக்காக ரூ.828.36 கோடி நிதி ஒப்புதல் அளித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தங்களை மேற்கொண்டு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி நிதியைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக, அரசுப் பள்ளிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கு மட்டுமே உபகரணங்கள் வாங்க எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, இந்தப் பட்டியலில் அங்கன்வாடி மையங்களும் சோ்க்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிறப்பித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.