கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.

தேனி மாவட்டம், கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றும் பணியில், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா, தவெக நிா்வாகிகளுடன் இணைந்து ஈடுபட்டாா்.

கம்பம் சின்ன வாய்க்காலில் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள், தவெக நிா்வாகிகளுடன் ஈடுபட்ட கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா.

Published On :22 அக்டோபர் 2026, 6:37 am IST

தேனி மாவட்டம், கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றும் பணியில், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா, தவெக நிா்வாகிகளுடன் இணைந்து ஈடுபட்டாா்.

முல்லைப் பெரியாறு பாசன நீா், கம்பம் பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் வழியாகச் சென்று வீரப்பநாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. இந்த நிலையில், சின்ன வாய்க்காலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பழைய துணிகள், மதுப் புட்டிகள், பழைய துணிகள், தலையணைகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீா் நிறம் மாறியதுடன், துா்நாற்றமும் வீசியது. இதுகுறித்து நீா்வளத் துறையினரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் புதன்கிழமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத்மிஸ்ரா தலைமையில் தூய்மைப் பணியாளா்களுடன் வாய்க்கால் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணியின்போது, தவெகவைச் சோ்ந்த தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலா் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அய்யா், மாவட்டப் பொருளாளா் கௌதம், கம்பம் ஒன்றியச் செயலா் ரஞ்சித், உத்தமபாளையம் ஒன்றியப் பொறுப்பாளா் தனசேகரன், கம்பம் நகரச் செயலா் சதீஷ், நகரப் பொருளாளா் அபு அஹமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது:

வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதில் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். வாய்க்காலில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது நீா்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.